News Just In

11/06/2025 03:40:00 PM

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனை !

சாய்ந்தமருது உணவகங்களில் திடீர் சுகாதார பரிசோதனை !



நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் சாய்ந்தமருது பிரதான வீதிகளில் உள்ள உணவகங்களில் இன்று (06) திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது சுகாதாரமற்ற சூழலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், தரமற்ற பொருட்கள் மற்றும் சேமிப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இச்சோதனைகள் டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்களும் பங்கு பற்றினர். இதன் போது சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள் பொதுமக்களிடம் உணவகங்களில் உணவருந்தும் போது அங்குள்ள சுகாதார நிலையை கவனித்து, குறைபாடுகள் இருப்பின் உடனடியாக சுகாதார பிரிவிற்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்

No comments: