News Just In

11/23/2025 03:25:00 PM

கிழக்கில் தொல்லியல் தேடல் தமிழர்களுக்கு மீண்டும் தொல்லைகளாகின்றனவா? ஜி.ஸ்ரீநேசன்,நாடாளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு.

 கிழக்கில்தொல்லியல்தேடல்தமிழர்களுக்குமீண்டும்தொல்லைகளாகின்றனவா? ஜி.ஸ்ரீநேசன்,நாடாளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு.


நாட்டையும் நல்லிணக்கத்தையும் குழப்புவதற்கு பேரினவாதிகளிடம் பல உயாயங்கள் உள்ளன. அவற்றில் தொல்லியல் திணைக்கள செயற்பாடும் முக்கியமானதாக அமைகின்றது.

நாமல் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டம் 21/11/2028 அன்று நுகேகொடையில் கூடுவதற்கு முன்தினம், மட்டக்களப்பில் பல பிரதேச செயலகப் பிரிவுகளில், தொல்லியல் தேடலுக்கான பதாகைகள் பல இடங்களில் இடப்பட்டுள்ளன. 

தந்தாமலை,அடைச்சகல்குளம்,பன்சேனை, காஞ்சிரன்குடா,சித்தாண்டி, பன்குடாவெளி, கொடுவாமடு,காயான் கேணி,கதிரவெளி மலைப்பகுதி,ஆயிரங்கால் மண்டபம், கல்லடிப் பிள்ளையாரடி, வேற்றுச் சேனை போன்ற பல இடங்களில் அடையாளப் பலகையிடும் செயற்படுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பில் அடாவடிகளுக்கும், குழப்பத்துக்கும் சூத்திரதாரியான அடிப்படைவாத மதகுரு ஒருவர் இருக்கின்றார், இவரை பேரினவாதிகள் கடந்த காலத்தில் அதிகமாகப்பயன்படுத்தினர். 

இம்முறையும் அந்த சூத்திரதாரி  நுகேகொட கூட்டத்தின் பின்னர், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் பிக்கு செயற்படுவதாக அறிய முடிகின்றது, நல்லிணக்கத்துக்கு விரோதமான தொல்லியல் செயற்பாடுகளை நிறுத்த வேண்டியது காலத்தில் கட்டாய தேவையாகும். 

இது தொடர்பாக பௌத்தசாசன அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி. ஸ்ரீநேசன்,இ.சிறிநாத் ஆகியோர் நேரடியா பாராளுமன்றத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.இந்த அரசாங்கம் இவ்விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டியுள்ளது.

No comments: