போராட்ட வடிவம் மாறலாம் என்றும் எமது மக்களின் விடுதலைக்கான சிந்தனை செயல் மாறாது பாராளுமன்றத்தில் மக்களில் ஒருவனாக முக்கியமான மகாவலி மற்றும் நீர்பாசனம் தொடர்பான அமைச்சின் விவாதத்தில் நேற்றைய தினம் 27.11.2025.
தேசிய மக்கள் சக்தியின் 2வது வருட ஆட்சியிலே மாவீரர் தினம் இரண்டாவதாக வந்திருக்கின்றது. இந்த வருடத்திலே வடக்கு கிழக்கு முழுவதும் சுதந்திரமான முறையில் மாவீரர் தினத்தை எவ்வித தடையுமின்றி அனுஷ்டிக்க இவ் அரசாங்கம் அனுமதி வழங்கியமைக்கு என் நன்றிகள். இழந்த எம் உறவுகளை நினைவு கூறும் முகமாக பல நிகழ்வுகளை நடாத்திக்கொண்டு இருக்கின்றார்கள் எம் தமிழ் மக்கள்.
முதல் இரண்டு வருடங்கள் மாவீரர் தினத்தை நினைவு கூற அனுமதி வழங்கிய முன்னைய அரசாங்கங்கள் அடுத்த இரு வருடங்களிலே மாவீரர் தினத்தை நினைவு கூற முன்னின்று உழைத்தவர்களை இனங்கண்டு பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களினூடாக கைது செய்வதனை கண்ணூடே காண முடிந்தது. தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளும் இதே போன்று அமையக்கூடாதெனும் வேண்டுகோளை இவ்விடத்திலே முன்வைக்கின்றேன்.
நீர்ப்பாசன திட்டங்கள், விவசாயம், மாகாவலி போன்ற அமைச்சின் முக்கிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எமது விடுதலைப் போராட்டம் என்ற ஒன்று பல்லாயிரம் மாவீர்களை மண்ணிலே விதைத்தமைக்கான முக்கிய காரணம் அன்றைய காலப்பகுதியில் ஆட்சியாளர்கள் செய்த முன்னேற்றத் திட்டங்கள். நீர்ப்பாசனத் திட்டங்களை முன் காட்டியே மறைமுகமாக குடியேற்றத் திட்டங்களை ஏற்படுத்தினர். அம்பாறை என்ற மாவட்டமே இல்லாத போது சேனநாயக்க திட்டம், கல்லோயா திட்டம் என்பவற்றினூடாக விகிதாசாரத்தை மாற்றியமைக்க மக்களை குடியேற்றிய சம்பவத்தினூடாகவே விடுதலைப் போராட்டம் ஆரம்பமாக காரணமாகியது. மாவீரர்கள் தனி நாட்டிற்காக போராடினர். அவர்களின் தியாகங்களுக்கு மக்கள் பிரதிநிதியாக நாங்கள் நீதி வழங்குவதாக இருந்தால் அரசியல் தீர்வொன்றினை பெற்றுக் கொடுப்பதே ஆகும். பாராளுமன்ற அமர்வுகள் நடாத்தப்பட்ட போதும் மாவீரர் நிகழ்வுகளை ஏற்படுத்த தடை விதித்தமைக்கு எதிராக களத்தில் நின்று போராடினோம். 2023ம் ஆண்டு தரவை துயிலும் இல்லத்தில் அஞ்சலிக்காக சென்ற போது பொலிசார் அங்கு வந்து பதாதைகளை கழற்றி, வயது முதிர்ந்த தாய்மார்களை தாக்கி அங்கிருந்தவர்களை கைது செய்தனர்.
இவ் விவாதத்திலே எம் மாவீரர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற இந் நேரத்தை பயன்படுத்திக் கொள்கின்றேன். எங்கள் மண்ணே எங்கள் சொத்து. கௌரவ கே.டி. லால் காந்த அவர்களின் அமைச்சே எமது நிலங்களை பறிமுதல் செய்வதில் முக்கியமாக செயற்படும் அமைச்சு. உங்கள் அமைச்சுக்கு கீழுள்ள மகாவலி அதிகார சபையானது இன்று மகாவலி திட்டத்தினூடாக நீரை வழங்காது ஆனால் நிலங்களை மட்டும் பறித்துக் கொண்டு இருக்கின்றனர். மகாவலி திட்டத்தினூடாக 1200 ஏக்கர் காணியை மேய்ச்சல் தரைக்கு வழங்குவதாக அமைச்சர் கூறினார். 750 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கும் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையார்கள் 1200 ஏக்கரை பெறுவதற்காக அல்ல. தாம் பயன்படுத்திய தமது 7000 ஏக்கர் காணியை பெறவே. 5 இலட்சத்துக்கு மேல் கால்நடைகளை வைத்திருக்கும் பண்ணையார்களுக்கு கட்டாயம் அவர்களது 7000 ஏக்கர் காணி தேவை. வடக்கு கிழக்கில் முக்கிய பொருளாதார நடவடிக்கைகள் மீன்பிடி, கால்நடை, விவசாயமே. மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கால்நடை வைத்திருப்போருக்கு நீதி இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் மகாவலி L வலயத்தின் கீழ் அதிக நிலங்களை வேற்று பிரதேசங்களில் இருந்து வருவோருக்கு வழங்கி குடியேற்றத் திட்டங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறான விடயங்களினாலேயே 30 வருட ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.
எமது பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னாயத்தமாக இருந்திருக்க வேண்டும். மலைநாட்டிலே இருந்து வரும் நீரானது கடலுடன் சேர்வது எமது மாவட்டத்திலேயே ஆகும். மகாவலி திட்டத்தின் மூலம் கொத்மலே எனும் பிரதேசத்தில் 5 இற்கும் அதிகமான நீர்த்தாங்கிகள் அமைத்தால் மாத்திரமே அப் பிரதேசத்தில் வரும் வெள்ளம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். ஏற்கனவே கட்டப்பட்ட குளங்களின் நீர்மட்டம் அதிகரித்தாலும் ஒரு திட்டமிடல் இன்றி நீரானது திறந்துவிடப்படுவதால் எம் மாவட்டம் நீரில் மூழ்குகின்றது. அனுபவமில்லாத மாவட்டப் பிரதிநிதிகள் வெள்ளம் வரும் வரை கொழும்பில் இருந்துவிட்டு வெள்ளம் வந்த பின் மட்டக்களப்பு சென்று அனர்த்த முகாமைத்துவத்தை மேற்கொள்ள முடியாது. கடந்த கால வெள்ளத்தில் சிக்குண்ட மக்களை எமது வாகனங்களைக் கொண்டே மீட்டோம். அன்று தான் இந்த நிலை என்றால் இன்றும் அதே அசமந்த நிலை. வெள்ளத்தில் பட்டினியால் வாடும் மக்களுக்கு எனது செலவில் நூடில்ஸ் வாங்கி கொடுத்த போது அப்போதிருந்த அபிவிருத்திக்குழுத் தலைவர் அருண் அவர்கள் அதற்கான பணம் அரசாங்கத்தினால் உங்களுக்கு வழங்கப்படும் என்றார். ஆனால் இதுவரை அது கிடைத்தபாடில்லை. இதை ஒரு உதாரணமாகவே கூறுகின்றேன். இந்த பணத்தை எதிர் பார்த்து நான் என் மக்களுக்கு உதவிகள் புரியவில்லை. இம் முறையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை வழங்குவேன். அரசு செய்யாது என்று எமக்கு தெரியும்.
கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட அதே முறை மீண்டும் பின்பற்றப்படுமாயின் மட்டக்களப்பு விவசாயிகள் பாரிய நட்டத்தை சந்திக்க நேரிடும். வெள்ளம் வந்தால் காப்புறுதியாளர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்து சேதத்திற்கு உள்ளாகாத பிரதேசங்களை மேலோட்டமாக பார்வையிட்டுவிட்டு 20% சேதமடைந்திருந்தால் ரூபா. 8000 என்று ஏதோவொரு தொகையை கூறிவிட்டு சென்றுவிடுவர். இந்த அரசாங்கம் இம்முறையாவது விவசாயிகளுக்கு தகுந்த முறையில் நட்ட ஈட்டினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மட்டக்களப்பிலே காணப்படும் நான்கு குளங்கள், அம்பாறை சேனநாயக்க சமுத்திரம் ஆகியவற்றை சிறப்பாக முகாமை செய்யும் போது நான்கு போகம் வயல் செய்யக்கூடியதாக இருக்கும். கண்டியனாறு குளம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கைகள் சமர்ப்பித்தோம். இக் குளத்தையும், பனிச்சங்கேணி வெகுவிரைவில் செய்து தருகின்ற போது விவசாய நிலங்களை எம்மால் பாதுகாக்க முடியும். பிரஞ்சு அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட நீர்த்திட்டம் பொருளாதார நெருக்கடி காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் கருத்திலெடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

No comments: