News Just In

10/10/2025 06:45:00 PM

இப்படியும் ஒரு M .L .A !

 இப்படியும்  ஒரு M .L .A ! சபாஸ்   தங்கபாண்டியன்.


ராஜபாளையத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அது. வழக்கத்திற்கு மாறாக நேற்று அதிகாலையிலேயே கடை திறக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மாறாக
200க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் மட்டும் கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தீபாவளிக்காக தங்களுக்கு பிடித்த புத்தாடைகளை உற்சாகத்தோடு அவர்கள் தேர்வு செய்தார்கள் . மொத்தம் 231 குழந்தைகள் . பில் தொகை 5.20 லட்சம்.

முழு பில் தொகையும் செலுத்தியவர் ராஜபாளையம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான தங்கபாண்டியன்.

இவர் தனது சம்பளப் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக செலவிட்டு வருகிறார்.ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளை கடைக்கு அழைத்து வந்து அவர்கள் விரும்பும் உடைகளை அவர்களுக்கு வாங்கி கொடுத்து அவர்களது தீபாவளியை தித்திக்க வைப்பது இவரது ஸ்டைல்.

கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து இப்படி செய்து வருகிறார் .

பொதுவாக சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் பெரும்பாலும் விமர்சனத்திற்கு உள்ளாகும். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார் தங்கபாண்டியன். 

No comments: