News Just In

10/09/2025 05:28:00 PM

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பரவும் செய்தி – பொலிஸ் விளக்கமளிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பரவும்  செய்தி  – பொலிஸ் விளக்கமளிப்பு – 



ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவிடம் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என பொலிஸ் தெரிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், அதனை கடுமையாக மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, 2025.10.08 அன்று பாராளுமன்ற உயர் பதவிகள் குறித்த குழுவின் அழைப்பைத் தொடர்ந்து ஆஜராகி, எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்ததாகவும், ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் கூறவில்லை எனவும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

மேலும், இத்தகைய தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரவி செனவிரத்னவின் சட்டத்தரணிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: