
இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்காலத்தில் இது தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
No comments: