அரசின் திரைமறைவில் இருந்து செயல்படும் நபர் யார்..!
அரசின் திரைமறைவில் இருந்து செயல்படும் நபர் யார்..! இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 09.10.2025. வெளி விவகார அமைச்சரிடம் இரா சாணக்கியன் வினவிய விடையம் ஏன் உலகத்தை எம்மை ஏமாற்றுகின்றீர்கள். இன்றைய தினம் நீங்கள் பாராளுமன்றத்தில் ஜெனிவாவில் இடம்பெற்ற விடையம் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்கும் போது ஏன் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக எவ்விதமான விடயங்களும் முன்வைக்கப்படவில்லை. ஆனால் உங்களின் கூற்றுப்படி ஜெனிவா சென்று விலகல் நடைமுறை முடிந்த பிறகுதான் சொல்வதாக சொல்லி இருந்தீர்கள். இவ்வாறு இரா சாணக்கியன் வினவிய போது ஒலி வாங்கி துண்டிக்கப்பட்டது. சபையில் சிறிய குழப்பம் காணப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமை மீறலுக்காக காரணம் நான் பிரதமரிடம் வினாவிய கேள்விகள் அனைத்தையும் அவர்களது அரசியல் குழுவானது கூடி முடிவெடுத்து இன்றைய தினம் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித கேரத் அவர்கள் பதிலளிக்கும் வரை பிரதமர் பதிலளிக்க கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு செய்யப்பட்டது. இதன் காரணமாகவே கடிதம் கிடைக்கவில்லை இரு வார கால அவகாசம் வேண்டும் என சாட்டு கூறப்பட்டது. இவ்வாறன செயல்பாடுகள் மூலம் பிரதமரை அவமானப்படுத்தும் நோக்கில் திரை மறைவில் இருந்து ஒருவர் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார். இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என இரா சாணக்கியன்அவர்களின் பாராளுமன்ற உரையானது அமைந்திருந்தது.
No comments: