சாய்ந்தமருதில் உலக மனநல விழிப்பூட்டும் நிகழ்வு
நூருல் ஹுதா உமர்
உலக மனநல தினத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்கத்தில் பெண்களுக்கான விழிப்பூட்டும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம் தலைமையில் இடம்பெற்றது.
இதில் சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத், கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா, சிரேஷ்ட மனநல ஆலோசகரும் சமுர்த்தி கருத்திட்ட உதவியாளருமான என்.எம். நௌஸாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். றிகாஸா ஷர்பீன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. எல்.முஸ்பீரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக மனநல தினத்தினை பற்றிய விரிவுரையினை மனநில உத்தியோகத்தர் எஸ் எச்.எம்.சியாம் நிகழ்த்தினார்.
No comments: