சிறுவர்களின் பங்குபற்றல் உரிமை மேம்பாட்டுக்கான விழிப்புணர்வு

சிறுவர்களின் பங்குபற்றல் உரிமையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை சிறுவர் கழகங்கள் ஆகும். இக்கழகங்கள் கிராம, பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.
திருகோணமலை மாவட்ட செயலகத்துக்குட்பட்ட மாவட்ட சிறுவர்களை ஒன்றிணைத்து, இணையத்தின் மூலம் சிறுவர்கள் சுரண்டப்படுவது, துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகுவது மற்றும் எவ்வாறான வகைகளில் பாதிக்கப்படுவது குறித்து தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு (11) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், திருகோணமலை, குச்சவெளி மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் பல சிறுவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வானது சிறுவர்களின் உரிமை உணர்வை வளர்த்தெடுக்கவும், இணையத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வானது சிறுவர்களின் உரிமை உணர்வை வளர்த்தெடுக்கவும், இணையத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முக்கிய பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது.
No comments: