News Just In

10/10/2025 02:25:00 PM

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் - ஒன்றிணையும் பிரதான கட்சிகள்

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் - ஒன்றிணையும் பிரதான கட்சிகள்



ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக ஒரு பொதுவான வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு நேற்று முடிவு செய்திருந்தது.

நேற்று இரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் கட்சியின் பிரதிநிதிகள் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டனர்.

எனினும் இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி தரப்பிலிருந்து சில சிக்கல்கள் எழுந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம். மரிக்கார் ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும், முன்னதாக இந்த கலந்துரையாடல்கள் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின் தலைமையில் நடைபெற்றன.

அதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று இரவு தனக்கு நெருக்கமான ஒருவருடன், இது தொடர்பில் உரையாடல் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இரு கட்சிகளின் இரண்டு பொதுச் செயலாளர்களின் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments: