News Just In

10/19/2025 10:55:00 AM

அடகுவைத்து நகையில் 04 கிராம் திருட்டு- களுவாஞ்சிகுடியில் சம்பவம்!

அடகுவைத்து நகையில் 04 கிராம் திருட்டு- களுவாஞ்சிகுடியில் சம்பவம்!



களுவாஞ்சிக்குடியில் ஒரு நகை கடையில் நகை அடகு வைத்து பின்னர் அதை மீண்டும் எடுக்கும் போது அதில் 04 கிராம் வெட்டப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட நகைத் தொழில் உரிமையாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் கூட்டம் ஒன்று இன்றைய தினம் ( 18 ) பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் சம்பவம் குறித்து தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

நகை அடகு பிடிக்கும் போது ஒரு வருட காலத்திற்கு அவகாசம் கொடுக்கப்பட்டு, 03 தரம் கடிதம் அனுப்பட வேண்டும் இது தான் நடைமுறை .
தங்க நகைகளை அடகு வைக்கும் போது 02 வீத வட்டியில் அடகு வைக்க வேண்டும்.

அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் தற்காலிக அனுமதி சான்றிதழ்கள் தான் உள்ளது.அங்குள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு அனுமதி சான்றிதழ்கள் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் தான் நிரந்தமாக்கப்படும் என சுட்டிக்காட்டினார்.

இக் கூட்டமானது பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பிரதேசத்தில் உள்ள நகைத் தொழில் உரிமையாளர்கள் பலரும் பங்குபற்றிருந்தனர்.

No comments: