ஆரையம்பதி பிரதேசத்தில் 17/10/2025 அன்று இடம்பெற்ற நகை திருட்டு சம்பவம் தொடர்பாக வவுனியாவைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் காத்தான்குடி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம். சுனித் வர்ணசூரியவின் வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ. றஹீம் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
திருடப்பட்ட நகையின் அளவு சுமார் 3.5 பவுண் ஆகும். இதன் பெறுமதி சுமார் 15 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விசாரணையில், குறித்த பெண் திருடிய நகையை வவுனியாவில் உள்ள நகைக் கடையொன்றில் விற்றுவிட்டு, மீண்டும் ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுக்க வருகை தந்திருந்தது தெரியவந்துள்ளது.இதையடுத்து, நகையை கொள்வனவு செய்த வவுனியாவைச் சேர்ந்த நகை வியாபாரியையும் காத்தான்குடி பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.
நகை திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் தொடர்புடைய ஆதாரங்கள் (திருடிய நகைகள்) என்பவற்றை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: