மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக ஒல்லாந்தர் கோட்டையில் உள்ள பாரிய கருங்குழவிக் கூடு
படத்தில் உள்ளது மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் அதாவது ஒல்லாந்தர் கோட்டையில் உள்ள பாரிய கருங்குழவிக் கூடாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான சுற்றுலா தளமாக விளங்கும் மேற்படி ஒல்லாந்தர் கோட்டையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர் அதுமட்டுமின்றி பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகளவில் இக் கோட்டையை பார்வையிட வருகை தருகின்றனர் இவ்வாறு சுற்றுலா வரும் பயணிகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தலாகவே மேற்படி குழவிக்கூடு காணப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தை சுற்றுலா கைத்தொழிலில் அபிவிருத்தி அடைய வைப்போம் என்று பீத்திக்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கண்களில் இக் குழவிக்கூடு அகப்படவில்லையா?என மக்கள் வினாவுகிறார்கள்
No comments: