News Just In

9/15/2025 02:14:00 PM

-WAXPOL OIL MART வெற்றிக் கிண்ணம்-2025 கடின பந்து T20 சுற்றுத்தொடர் : சம்பியனானது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம




நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட WAXPOL OIL MART வெற்றிக் கிண்ணம்-2025 கடின பந்து இருபதுக்கு இருபது சுற்று தொடரின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் விளாஸ்டர்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகியன ஒன்றையொன்று எதிர்த்தாடின. நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய விளாஸ்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் விளாஸ்டர்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக அசார்தீன் 83 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் இச்சுற்றுத்தொடரின் தொடராட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

பந்து வீச்சில் விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக முஹாஸ் 4 ஓவர்களில் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கல்முனை விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் 18.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டனர். இதில் விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக பிர்தௌஸ் 31 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு பந்து வீச்சில் விளாஸ்டர்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக றுஹைம் 4 ஓவர்களில் 4 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் பிளாஸ்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 77 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக WAXPOL OIL MART நிறுவனத்தின் உரிமையாளர் யூ.எல்.எம். சப்ரி அவர்களும் கௌரவ அதிதிகளாக அமீனாஸ் நகையகத்தின் உரிமையாளர் ஏ.ஆர்.எம். கியாஸ் அவர்களும் மருதமுனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரைஸுல் ஹாதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments: