
சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான தகவல்களில் போலியான விபரங்கள் சேர்த்தல் அல்லது உண்மையை மறைத்தல் குற்றமாகும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனவே, ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் இதற்கு தண்டனை பெறக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024–2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான சில தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி பயணச் செலவுகள் தொடர்பான விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டவில்லை என்றும் அரசியல் பழிவாங்கல்கள் மட்டுமே முன்னிலையில் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
No comments: