News Just In

9/16/2025 06:00:00 PM

கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லை; இறக்குமதி செய்யப்படாது! - விவசாய பிரதி அமைச்சர் தெரிவிப்பு


கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லை; இறக்குமதி செய்யப்படாது! - விவசாய பிரதி அமைச்சர் தெரிவிப்பு




கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவவில்லை என்ற காரணத்தால், அரிசியை இறக்குமதி செய்வதற்கான தேவை இல்லை என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

எனினும், தற்போது சித்தரிக்கப்படும் தட்டுப்பாடானது அரிசி ஆலை உரிமையாளர்களால் உருவாக்கப்பட்டது என விவசாய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன.

இதேவேளை, கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாடு குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை தமது கருத்துக்களை முன்வைத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி விற்கப்படுமாயின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதன்காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைய அரிசியைக் கொள்வனவு மற்றும் விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அரிசி தொடர்பான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments: