புலிகளின் ஆயுதங்களைக் களவாடிய கோட்டாபய! தட்டிக் கேட்ட அநுரகுமார
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
தமிழ் இன அழிப்பை மேற்கொண்டார், பாரிய யுத்தக்குற்றங்கள் இடம்பெறக் காரணமாக இருந்தார், வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்தவர்களை படுகொலைசெய்யக் கட்டளையிட்டார், ரிப்போலிக் குழு என்று ஒன்றை உருவாக்கி ஏராளமான நீதிக்குப் புறம்பான படுகொலைகளைப் புரிந்தார், ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு மறைமுகக் காரணமாக இருந்தார் என இப்படி அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
கோட்டாபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடலுக்கு பலம் மிக்க ஒரு ஆயுதக் குழுவை அனுப்பி வைத்திருந்தார் என்கின்ற ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது.
புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட் ஆயுதங்களை சட்டவிரோதமாக தனது தனியார் ஆயுதக் குழுவுக்கு வழங்கி, அதனைச் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டும் கோட்டாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தது
9/16/2025 05:59:00 PM
புலிகளின் ஆயுதங்களைக் களவாடிய கோட்டாபய! தட்டிக் கேட்ட அநுரகுமார
Subscribe to:
Post Comments (Atom)
No comments: