நூருல் ஹுதா உமர்
1500 வது புனித மீலாத்தை முன்னிட்டு கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம் வழமை போன்று ஏற்பாடு செய்துள்ள மாபெரும் ஈத் மீலாத் ஊர்வலம் 06.09.2025 (சனிக்கிழமை) காலை 07.00 மணிக்கு கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா முன்றலில் இருந்து ஆரம்பமாகும் என கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
கல்முனை சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றிய காரியாலயத்தில் இன்று (04) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைப்பின் தலைவர் எஸ்.எச். எம். நிசார், உப செயலாளர் ஏ.டபலியு முனாஸ், நிர்வாக உறுப்பினர் எம்.எச்.எம். அஸாஹிம் ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்கள் நாளை வெள்ளிக்கிழமையாக இருப்பதனால் நாளை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு சன நடமாட்டம் குறைவாக இருக்கும். நபிகளாரின் புகழை ஓங்க செய்யவே இந்த ஈத் மீலாத் ஊர்வலம் சந்ததி சந்ததியாக 40 வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அவதரித்த புனித றபீஉனில் அவ்வல் பிறை 12ல் மாபெரும் ஈத் மீலாத் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தும் வெள்ளிக்கிழமை ஜும்மா உடைய நாள் என்பதால் நாளை மறுதினம் இந்த ஊர்வலத்தை நடத்த பல்வேறு சமூக, சமய நிறுவனங்களுடன் கலந்துரையாடி முடிவு செய்துள்ளோம்.
அஸ்ஸெய்யிது ஷெய்க் மௌலவி அல்ஹாஜ் ஏ.அப்துர் றஊப் மிஸ்பாஹி பஹ்ஜி அவர்களின் ஆலோசனை வழிகாட்டலுடன் கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா முன்றலில் இருந்து ஆரம்பமாகும் இந்த ஊர்வலம் கல்முனை நகர், பொதுச்சந்தை, இஸ்லாமபாத், கல்முனை நகரின் பிரதான வீதிகளினூடாக பயணித்து இறுதியாக கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபை அடைந்து தபர்ருக் விநியோகத்துடன் நிறைவடைய உள்ளது.
கலந்து கொள்ளும் அனைவருக்கும் புனித ஈத் மீலாத் சின்னம் பொறிக்கப்பட்ட கைக்கொடி அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது டன் பெருமானாரின் நேசர்கள், இளைஞர்கள் இந்த ஊர்வலத்தில் எம்பெருமானாரின் அருள் வேண்டி தங்களது வாகன சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைக்கிறோம். தங்களது வாகனங்களில் வருவோர் சட்டங்களை மதித்து நடக்குமாறும், மோட்டார் சைக்கிளில் ஊர்வலத்தில் கலந்து கொள்வோர் தலைக்கவசம் (Helmet) அணிந்து வருவது அவசியமாகும்.
கல்முனை மாநகர சபை, பொலிஸார் எங்களுக்கு பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ளதுடன் கண்ணியமாக ஈத் மீலாத் ஊர்வலத்தில் சகலரையும் கலந்துகொள்ள வேண்டிக்கொண்டார்கள்.
No comments: