News Just In

9/23/2025 09:18:00 AM

களத்தில் வன்மத்தை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள்


களத்தில் வன்மத்தை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள்


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.

தொடக்க வீர​ரான சாஹிப்​ஸதா ஃபர்​ஹான் 45 பந்​துகளில் 58 ரன்​கள் சேர்த்​தார். இறு​திக்​கட்​டத்​தில் பஹீம் அஷ்ஃரப் 8 பந்​தில் 20 ரன்​கள் எடுத்​தார். இதனால் அந்த அணி​யின் ஸ்கோர் கணிச​மாக உயர்ந்​திருந்​தது. 172 ரன்​கள் இலக்கை விரட்​டிய இந்​திய அணி அபிஷேக் சர்மா 39 பந்​துகளில் (5 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​கள்) விளாசிய 74 ரன்​கள் மற்​றும் ஷுப்​மன் கில் 28 பந்​துகளில் சேர்த்த 47 (8 பவுண்​டரி​கள்) ரன்​கள் உதவி​யுடன் 18.5 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 174 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. அபிஷேக் சர்​மா, ஷுப்​மன் கில் ஜோடி முதல் விக்​கெட்​டுக்கு 105 ரன்​கள் குவித்து மிரட்​டி​யி​யிருந்​தது.

லீக் சுற்றை போன்று இந்த ஆட்​டத்​தி​லும் இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் டாஸின் போது பாகிஸ்​தான் கேப்​டன் சல்​மான் அலி ஆகா​வுடன் கைகுலுக்​க​வில்​லை. மேலும் போட்டி முடிவடைந்த பின்​னரும் இரு அணி​களும் கைகுலுக்​கும் சம்​பிர​தா​யங்​களும் நிகழ​வில்​லை. இது ஒரு​புறம் இருக்க இந்த ஆட்​டத்​தின் போது பாகிஸ்​தான் வீரர்​கள் நடந்து கொண்ட விதம் சர்ச்​சைக்​குள்​ளாகி உள்​ளது.

இந்த போட்​டி​யின் போது பாகிஸ்​தான் வீரர்​கள் சர்ச்​சைக்​குரிய மற்​றும் அரசி​யல் ரீதி​யாக நோக்​கம் கொண்ட சைகைகளைச் செய்​தனர். சாஹிப்​ஸதா ஃபர்​ஹான் அரை சதம் அடித்​ததும் தனது மட்​டையை துப்​பாக்கி போன்று வைத்து ரசிகர்​களை நோக்கி சுடு​வதை போன்று கொண்​டாடி​னார். இதுதொடர்​பான படங்​கள் சமூக வலை​தளங்​களில் அதி​கம் பகிரப்​பட்டு விமர்​சிக்​கப்​பட்​டன. சாஹிப்​ஸதா ஃபர்​ஹானின் செயல் விளை​யாட்டு அறத்​தை​யும், மாண்​பை​யும் சீர்​குலைக்​கும் வகை​யில் இருந்​த​தாக ரசிகர்​கள் குற்​றம் சாட்​டினர்

No comments: