News Just In

5/17/2025 05:19:00 PM

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பில் குகதாசன் எம்.பியின் உதவியாளர்களுக்கு பொலிஸார் அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பில் குகதாசன் எம்.பியின் உதவியாளர்களுக்கு பொலிஸார் அழைப்பு



திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனின் உதவியாளர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தில் ஈடுபட்டமை தொடர்பிலேயே அவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சண்முகம் குகதாசனின் கள ஆய்வு உத்தியோகத்தரும் கட்சி ஆதரவாளர் ஒருவரும் பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

No comments: