News Just In

5/16/2025 01:13:00 PM

.வருடாந்த சொத்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க காலக்கெடு!

வருடாந்த சொத்து விபர அறிக்கையை சமர்ப்பிக்க காலக்கெடு!




வருடாந்த சொந்து விபர அறிக்கையை ஜூன் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நிறுவனத் தலைவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் நிறுவனத் தலைவர்கள் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தொடர்புடைய படிவங்களை பூர்த்தி செய்து ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 80 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு நபரும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க வேண்டும் என்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: