மகிந்த தொடர்பில் இந்திய பிரதமரின் கோரிக்கையை ஏற்க மறுத்த அநுர அரசு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க காத்திருந்த போதிலும் முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய பிரதமரின் இலங்கைக்கான விஜயத்தின் போது அரசியல்வாதிகள் பலரையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்
எனினும் வெளிவிவகார அமைச்சு மோடியின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் மோடி இலங்கை வந்த போது மகிந்தவை சந்தித்துள்ள போதிலும் அரசாங்கம் இம்முறை சந்திக்க அனுமதிக்கவில்லை என அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
4/09/2025 01:06:00 PM
மகிந்த தொடர்பில் இந்திய பிரதமரின் கோரிக்கையை ஏற்க மறுத்த அநுர அரசு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: