News Just In

4/01/2025 01:30:00 PM

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!

வியாழேந்திரனின் விளக்கமறியல் நீடிப்பு!




கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் பெற்றுக்கொள்வதற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைதாகியிருந்தார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் கைதான வியாழேந்திரன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: