News Just In

4/10/2025 10:59:00 AM

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய நடைமுறை!

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய நடைமுறை



அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த நடைமுறை அடுத்து வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்த பரீட்சார்த்த திட்டம் கொட்டாவ மற்றும் கடவத்தை சந்திப்புகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

இந்த திட்டத்தைத் தொடர்ந்து, மே மாதம் முதல் நாட்டிலுள்ள அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அட்டை மூலம் பணம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: