அபு அலா
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கியுள்ள
சம்மாந்துறை வேட்பாளர்களில் சிலர், நாபீர் பௌண்டேசன் மாம்பழச் சின்ன சுயேட்சை அணியுடம் இணைந்து செயற்படுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சம்மாந்துறை பிரதேச சபை சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கும், அப்பிரதேச அமைப்பாளருக்குமிடையில் இடம்பெற்ற கருத்து முறன்பாடுகள் காரணமாக முக்கிய நான்கு வட்டாரங்களின் வேட்பாளர்கள் மாம்பழச் சின்ன சுயேட்சை குழு அணியில் இணையவுள்ளனர்.
சம்மாந்துறை பிரதேச சபையை முன்னெடுத்துச் செல்லாக்கூடிய சிறந்த வளங்கள் இருந்தும் அதனை ஆட்சி செய்தவர்கள் அப்பிரதேச மக்களின் அபிலாசைகளையும், சிறந்த அபிவிருத்தி திட்டங்களையும் நிறைவேற்றும் வித்தத்தில் உபயோகப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்களை அப்பிரதேச புத்திஜீவிகளும், துறைசார்ந்தவர்களும், உலமாக்களும் குறிப்பாக பொதுமக்களும் இக்கருத்தினை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையை ஆட்சி செய்தவர்களின் கையில், இம்முறை ஆட்சி அதிகாரத்தை நாம் வழங்காமலும், சந்தர்ப்பவாதிகளின் பின்னால் செல்வதையும் நிறுத்திவிட்டு ஊர்பற்றி சிந்திக்கும் ஒருவரான நாபீர் பௌண்டேசனின் சுயேட்சை குழுவான மாம்பழச் சின்ன அணியை பலப்படுத்தி அவர்களின் கையில் சம்மாந்துறை பிரதேச சபையை வழங்குவோமென்ற ஒருமித்த முடிவையும் அப்பிரதேச மக்கள் எடுத்துள்ள மையும் குறிப்பிடத்தக்கது.

No comments: