News Just In

4/27/2025 11:59:00 AM

முழு இலங்கையும் நிராகரித்த வைத்தியர் ஷாபியின் மகளின் வியக்க வைக்கும் சாதனை! மனமுடைந்த ஆசான்!

முழு இலங்கையும் நிராகரித்த வைத்தியர் ஷாபியின் மகளின் வியக்க வைக்கும் சாதனை! மனமுடைந்த ஆசான்



ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண் நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் தான் ஷாபி ஷிஹாப்தீன்.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் இந்த பெயரை அறியாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் மகப்பேறியல் தொடர்பான சிரேஷ்ட அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த இவர் சில அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினார்.

வைத்தியர் ஷாபி பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அத்துடன் சிஹாப்தீன் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க அனுராதபுரத்தில் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு சொந்தமானது என கூறப்படும் வீடொன்றினுள் இருந்து கடந்த வருடம் மர்மான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கலவெவ, பலலுவெவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிரியாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, மொஹமட் அஸ்கர் மொஹமட் நிதாம் என்ற 58 வயதுடையவரே, உயிரிழந்துள்ளதாக தெரியவந்தது.

இவ்வாறாக குற்றச்சாட்டுக்கள் மேல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன்வைக்கப்பட்டிருந்தன.
தொடர் குற்றச்சாட்டுக்களின் பின்னணியில்

இந்நிலையில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தன் மீதான கைது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டார்.

முறைப்பாடு அளித்த பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த 5 வருட விசாரணையின் போது தானும் தனது மனைவியும் பல முறைப்பாடுகளை தாக்கல் செய்திருந்தோம். ஆனால் அதற்கான நீதி கிடைக்கவில்லை.



தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே முறைப்பாடளித்தேன். அரசியல் நோக்கத்திற்காகவும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் நோக்கிலும் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காகவே முறைப்பாடு செய்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த தொடர் குற்றச்சாட்டுக்களின் பின்னணியில் விசேட வைத்திய நிபுணர் ஷாபி சிஹாப்தீன், அவர் மீது சுமத்தப்பட்ட சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் குருநாகல் நீதவான் நீதிமன்ற கடந்த வருடம் நவம்பர் மாதம் அவரை விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் தற்போது உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளார்.

Bandara Thilakarathna என்பவர் தனது முக நூலில் வைத்தியர் ஷாபியின் மகளை பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

”அதில் இந்த மருத்துவரைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவர் செய்யாத குற்றத்திற்காக கைவிலங்குகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த நேரத்தில் பலர் இந்த சிறைவாசத்தை ஆமோதித்தனர். ஆனால் இதயம் உடைந்த ஒரு சிலரில் நானும் ஒருவன்.

குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்ட இந்த மருத்துவரின் மகள் Zainab Shafi நான் அப்போது பணிபுரிந்த மலியதேவ பாடசாலையில் மாணவியாக உதவியற்ற நிலையில் இருந்தபோது என் இதயம் மிகவும் நெகிழ்ந்தது.

நான் அதைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதினேன். Zainab Shafi ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் தந்தை செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டபோது, ​​அவள் அந்த பாடசாலையை விட்டு சென்றதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

அதன் பிறகு, அவள் மிகவும் வேதனையான வாழ்க்கையை வாழ்ந்தாள். ஆனால் அந்தத் தடைகள் அனைத்தையும் மீறி, அவள் கல்வியை வென்றாள்.

சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியுடன் சித்தியடைந்தார். அவள் தேர்ச்சி பெற்றார் என்பதை சமூக ஊடகங்களில் பார்த்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

"நான் என் அப்பாவை விட சிறந்த வைத்தியராகப் போகிறேன், என் அப்பாவை அவமதித்த அனைவருக்கும் நான் சிகிச்சை அளிப்பேன்..."அவள் சாதாரண தர பரீட்சை முடிவுகளுக்குப் பிறகு உறுதியுடன் சொன்னாள்.

இன்று, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வந்தபோது அவளுடைய குரல் மீண்டும் என் காதுகளில் கேட்டது. "Sir நான் Zainab , ரிசல்ட் சொல்லத்தான் கூப்பிட்டேன் Sir , மாவட்ட ரேங்க் Rank 12 மருத்துவம் படிக்க போகலாம்..." என்று .கூறினாள் 



No comments: