News Just In

3/14/2025 05:03:00 PM

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.



பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பட்லந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு கடந்த திங்கட்கிழமை (10) அமைச்சரவை தீர்மானம் எடுத்திருந்தது.

இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ  அண்மையில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ) கடந்த வாரம் அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துகளை அடுத்து பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை மீண்டும் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: