News Just In

3/18/2025 01:06:00 PM

"பாடசாலையில் சிறந்த முன்மாதிரி போட்டியில்" சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் முதலிடம் !

"பாடசாலையில் சிறந்த முன்மாதிரி போட்டியில்" சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் முதலிடம் !
 



நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய மட்டத்தில் 2024-12-24 ஆந் திகதி நடைபெற்ற பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் "சிறந்த முன்மாதிரி" (Best Practices Competition -2024) போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) பாடசாலை முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

அதற்கான சான்றிதழும் வெற்றிக் கிண்ணமும் திங்கட்கிழமை (17) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கணக்காய்வு முகாமைத்துவ கூட்டத்தை தொடர்ந்து கல்முனை வலயக் கல்வி அலுவலக கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச். றியாஸா அவர்களின் நெறிப்படுத்தலில் வலய கணக்காளர் திரு. கே. லிங்கேஸ்வரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.நிஸாம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த அடைவை பெற்ற பாடசாலைக்கு கல்வி சமூகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது

No comments: