நூருல் ஹுதா உமர்
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் வருடாந்த இப்தார் நிகழ்வு கல்லூரியின் கலாச்சார குழுவின் ஏற்பாட்டில் கல்லூரின் முதல்வர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் 2025.03.16 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பக்கீர் ரம்ஸீன், கல்முனை கல்வி வலய கணக்காளர் கே. லிங்கேஸ்வரன், கல்முனை மாநகர சபை பொறியியளாளர் ஜௌஸி அப்துல் ஜப்பார், கோட்டக்கல்விப் பணிப்பாளர் அஸ்மா அப்துல் மலிக், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், பிராந்திய பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் நன்கொடையாளர்கள் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இப்தார் சிந்தனையை இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கல்முனை பிரிவு தலைவர் அஷ்ஷெய்க். முர்ஷித் முப்தி ( ஸஃதி, நஜ்மி ) அவர்களால் நிகழ்த்தப்பட்டது. பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளரின் விசேட உரை நிகழ்தப்பட்டதுடன் இராப்போஷணத்துடன் வருடாந்த இப்தார் நிகழ்வு நிறைவடைந்தது
No comments: