எஸ்.எம்.முபின், அபு அலா
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி திருகோணமலை காந்திநகர் மகளிர் அபிவிருத்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வு (16) திருகோணமலை காந்திநகர் பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
குறித்த மகளிர் சங்கத் தலைவி திருமதி சசிகலா தேவி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு காந்திநகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கார்மேகம் காசிநாதன் பிரதம அதிதியாகவும், காந்திநகர் HFC அருட்தந்தை நிருஷன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி டிலோகா லசந்தி பொண்சேகா ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரிட்சையில் 6A இற்கு மேற்பட்ட சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுப்பொதிகளும் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் தற்போது க.பொ.த உயர்தரம் கற்கின்ற மாணவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இம்முறை வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக அரச உதவிகள் மற்றும் வெளிநாட்டு உதவிகள் எதுவும் பெறாமல் மிக வருமைக்கோட்டின் கீழ் காந்திநகர் கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கி வாழ்ந்து வருகின்ற 20 குடும்பங்களுக்கு அரிசிப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments: