News Just In

3/07/2025 02:09:00 PM

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் களமிறங்கும் மொட்டு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் களமிறங்கும் மொட்டு!




உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் எந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகின்றது எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தலை எதிர்கொள்வதற்கான மொட்டுக் கட்சியின் ஏற்பாடுகள் தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசத்திடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மலையகம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடும் நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. மொட்டுச் சின்னத்தில் களமிறங்கவே எதிர்பார்க்கின்றோம்.

எனினும், வடக்கு, கிழக்கில் சிறு மாற்றம் வரலாம். பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம்.

இவ்விரு மாகாணங்களிலும் சில இடங்களில் மொட்டுச் சின்னத்தில் வருவோம் எனவும் தெரிவித்துள்ளார்

No comments: