News Just In

3/26/2025 06:06:00 PM

அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது!

அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது!



2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாற்றியமைக்கப்பட்ட புதிய சம்பள திருத்த அளவுத்திட்டங்கள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் குறித்த விபரங்கள் சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

No comments: