News Just In

2/18/2025 02:45:00 PM

புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடமை பொறுப்பேற்பு!

புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடமை பொறுப்பேற்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு – பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலுள்ள ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடமையேற்கும் நிகழ்வு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் திங்களன்று இடம்பெற்றது.

இதுவரை காலமும் அனுராதபுரம் நகர பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ரீ.பீ.சீ பண்டார ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டாரவின் கடமையேற்பு நிகழ்வில் அந்நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் சஞ்ஜீவ உதயகுமார, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சிவநாதன் பொலிஸ் பரிசோதர்களான எம். அப்துல் றஹீம், எஸ்.எல். முஹம்மத் சரூக், உட்பட இன்னும் பல பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கடைசியாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ஹர்ஷ டீ சில்வா இடமாற்றத்தின் அடிப்படையில் மஹரகம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமைப் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

No comments: