எல்ல ஒடிசி புகையிரதத்தில் இடம்பெறும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு ஊழல் தொடர்பான சந்தேக நபர்கள் கைது
திருகோணமலை பிரதேசத்தில் புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரியினால் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எல்ல ஒடிசி புகையிரதத்தில் இடம் பெறும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு ஊழல் தொடர்பான முறைப்பாட்டிற்கு இணங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சோதனைகளுக்கு அமைவாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் காணப்பட்ட இலத்திரனியல் பற்றுச் சீட்டு 92 பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்த பற்றுச்சீட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மற்றும் ஏனைய சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக விலையில் விற்பனை செய்வதற்காக தம்வசம் வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் சந்தேக நபர் ஒருவர் மாத்தளை பிரதேசத்தில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி குற்ற விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு ஏற்ப குறித்த நபரிடம் காணப்பட்ட தகவலுக்கு அமைவாக 29 இலத்திரனியல் பற்றுச் சீட்டுகளை தம்வசம் வைத்திருந்த மற்றொரு நபரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த சந்தேக நபரிடம் காணப்பட்ட 131,000 ரூபாய் அளவிலான பணத்தொகை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டது. இந்த சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1/23/2025 06:35:00 PM
Home
/
Unlabelled
/
எல்ல ஒடிசி புகையிரதத்தில் இடம்பெறும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு ஊழல் தொடர்பான சந்தேக நபர்கள் கைது!
எல்ல ஒடிசி புகையிரதத்தில் இடம்பெறும் இலத்திரனியல் பற்றுச்சீட்டு ஊழல் தொடர்பான சந்தேக நபர்கள் கைது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: