News Just In

1/10/2025 01:06:00 PM

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கிள் விபத்து ; மூவர் படுகாயம்

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கிள் விபத்து ; மூவர் படுகாயம்




மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி செல்வா நகர் மத்தி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (9) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் முச்சக்கரவண்டி சாரதியும் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: