News Just In

1/02/2025 04:24:00 PM

திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் நியமனம்!


திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் நியமனம்!






திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இடமாற்றம் பெற்று சென்றதுடன் புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்படும் வரை அரசாங்க அதிபரின் கடமைகளை கவனிப்பதற்காக பதில் அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன் புதன்கிழமை (01) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை தரம் 1 உத்தியோகத்தரான இவர் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் (காணி) மற்றும் கிழக்கு மாகாண பிரதித் தேர்தல்கள் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.தற்போது திருகோணமலை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: