News Just In

1/12/2025 05:46:00 PM

வாய் சுகாதார பிரிவுகளின் சேவையை மேம்படுத்த மருத்துவ உபகரணம் வழங்கி வைப்பு!

வாய் சுகாதார பிரிவுகளின் சேவையை மேம்படுத்த மருத்துவ உபகரணம் வழங்கி வைப்பு





நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் வாய் சுகாதார பிரிவுகளின் சேவையை மேம்படுத்தும் பொருட்டு, குறித்த பிரிவுகளுக்கு பற்சிகிச்சை மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குறித்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மருதமுனை, அட்டாளைச்சேனை, இறக்காமம், அன்னமலை, ஒலுவில் ஆகிய பிரதேச வைத்தியசாலைகளின் வாய் சுகாதார பிரிவுகளுக்கும், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை ஸாஹிரா கல்லூரி என்பவற்றின் பற்சிகிச்சை நிலையங்களுக்கும் குறித்த மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிராந்திய வாய் சுகாதார பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் யூ.ஹபீப் முஹம்மட் உள்ளிட்ட பிரிவு தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: