இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத் தலைவராக அனில் ஜெயந்த, துணைத்தலைவராக ஸ்ரீநாத், செயலாளராக ஹர்ஷண ராஜகருணா நியமனம்
இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, துணைத்தலைவராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத், செயலாராக ஹர்ஷணா ராஜகருண ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) இலங்கை - அமெரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்க நிர்வாகிகள் தெரிவு நடைபெற்றது.
தெரிவின் போது கடும் போட்டித்தன்மைக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் ஸ்ரீநாத்தின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முன்மொழிந்துள்ளார்.
துணைத் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரை நியமிப்பதற்கு அரச தரப்பு முயற்சித்த போது , அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் நட்புறவுச் சங்கத்தின் துணைத் தலைவராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments: