தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பில் புதனன்று 30.01.2025 இடம்பெற்றது.
நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 15,000 தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் திட்டம் அமுலாக்கப்பட்டு வருகிறது. அதற்கமைவாக கிழக்கு மாகாணத்திற்கான துவக்கம் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லசந்த பெர்னான்டோ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கைத்தொழில் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா, மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என். தனஞ்சயன், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் சதா சுபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் தொகைக்கான காசோலைகள் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளினால் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
No comments: