
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி (NPP) குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் வடமேற்கு மாகாண இயந்திர மற்றும் உபகரண ஆணைக்குழுவிற்கு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, “அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வாகனம் வழங்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதுவரை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த வாகனங்களும் வழங்கப்படவில்லை. ஒரு அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினருக்கு தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு வாகனம் தேவை, அதை நாங்கள் மறுக்க முடியாது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வகை முடிவு செய்யப்படவில்லை என்றாலும், அவை நிச்சயமாக புதியதாக இருக்கும், மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்
No comments: