News Just In

1/08/2025 06:01:00 PM

வைத்திய அதிகாரியான இலக்கிய ஆர்வலரின் மகள் தேசிய இலக்கிய விருதை வென்றார்

வைத்திய அதிகாரியான இலக்கிய ஆர்வலரின் மகளும் தேசிய இலக்கிய விருதை வென்றா ர்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

வைத்திய அதிகாரியும் எழுத்தாளரும் இலக்கியத்துக்கான விருதுகள் பெற்ற இலக்கிய ஆர்வலருமான ஜலீலாவின் மகளும் தேசிய இலக்கிய விருதைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் அறபா வித்தியாலய மாணவி எம். பாத்திமா மஹ்தியா, பிரதேச, மாவட்ட, தேசிய மட்டங்களில் நடைபெற்ற தேசிய இலக்கியப் போட்டித் தொடர்களின் இறுதிச்சுற்றில் வெற்றியடைந்து விருது பெற்றுள்ளார்.

இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெற்றவர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு அலரி மாளிகையில் இடம்பெற்றபோது கனிஷ்ட பிரிவு கவிதை ஆக்கத்தில் தேசிய ரீதியாக மூன்றாம் இடத்தைப் பெற்றமைக்காக பாத்திமா மஹ்தியாவும் தனக்கான விருது, பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பாத்திமா மஹ்தியாவின் தந்தை எஸ்.எச். முஸம்மில் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராகக் கடமையாற்றுகிறார்.

No comments: