சுவாமி விவேகானந்தரின் 163வது ஜெயந்தி தின விழா மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சிறீமத் சுவாமி நீலமாதவானந்தாஜீ மஹராஜ் தலைமையில் செவ்வாயன்று 21.01.2025 இடம்பெற்றது.
சுவாமி விவேகானந்தரின் திருச்சொரூப பவனி கல்லடி உப்போடை சிறீ பேச்சியம்மன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, பழைய கல்முனை வீதி வழியாகச் சென்று கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியூடாக மீண்டும் இராமகிருஷ்ண மிஷனை வந்தடைந்தது.
அங்கு விசேட பூசை வழிபாடுகள், பஜனை, சிறப்பு ஆராத்தி என்பன நிகழ்த்தப்பட்டு சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி தின விழா அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்புக் கிளையின் உதவி மேலாளர் உமா தீஷானந்தாஜீ மஹராஜ் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments: