News Just In

1/08/2025 10:52:00 AM

சாய்ந்தமருதில் திடீர் சோதனை : மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு, 09 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சாய்ந்தமருதில் திடீர் சோதனை : மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு, 09 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை 


நூருல் ஹுதா உமர்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பண்டங்களை கையாளும் நிறுவனங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ மதன் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் அடங்கலான பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த திடீர் பரிசோதனையில் ஈடுபட்டனர்

இதன் போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது டன், முறையற்ற வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட 09 வியாபார நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது

No comments: