News Just In

12/17/2024 06:02:00 AM

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி !


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மூக்கில் அறுவை சிகிச்சை ஒன்றை செய்து கொள்வதற்காக பல மாதங்களாக காத்திருப்பதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் தாமதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு வாசனை உணர்வு முற்றிலுமாக இல்லாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தன்னால் இயல்பு வாழ்க்கையை வாழ கடினமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சத்திர சிகிச்சைக்காக தனக்கு முதல் 20 பேர் வரை காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

No comments: