News Just In

12/16/2024 06:14:00 PM

ஊடகவியலாளர் சக்திவேலுக்கு இவ்வருடத்தில் இரு விருதுகள்!

ஊடகவியலாளர் சக்திவேலுக்கு இவ்வருடத்தில் இரு விருதுகள்.


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் இவ்வருடத்தில் இரண்டு விருதுகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய “தமிழ் இலக்கிய விழாவில்” 2023ஆம் ஆண்டின் ஊடகத்துறைக்கான “இளங்கலைஞர் விருது” வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதனன்று 11.12.2024 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் இவ்விருது திருகோணமலையில் வைத்து வழங்கப்பட்டது.

இதேவேளை, சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ஐ.ரி.ஆர்) இன் 28வது ஆண்டு விழா யாழ்ப்பாணம் ரில்கோ மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.12.2024) இடம்பெற்றபோது “2024 இன் சிறந்த ஊடகவியலாளருக்கான விருது" இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது..

ஊடகவியலாளர் சக்திவேல், இதற்கு முன்னரும் ஊடக விருதுகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

2008ஆம் ஆண்டில் சிறந்த மக்கள் சேவை ஊடகவிருது, 2018ஆம் ஆண்டில் சிறந்த கட்டுரையாளருக்கான விருது, 2022ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் செட்டியார் விருது, உள்ளிட்ட தேசியான விருதுகளையும் மற்று கிராமிய, பிரதேச மட்டங்களில் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் கடந்த சுமார் 18 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து அவர் தனது ஆரம்பக்கல்வியை அவர் பிறந்த களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திலும் (தேசியபாடசாலை), கற்ற சக்திவேல், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் தனது பி.ஏ. பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்து, ஊடகத்துறையில் டிப்ளோமா கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார்.

அதற்கும் மேலாக பல சிவில் அமைப்புக்களில் இணைந்து கொண்டு சமூக சேவைகளையும் மேற்கொண்டு வரும் அவர் யோகாசன பயிற்றுவிப்பாளராகவும், முதலுதவிப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். அவர் 2022ஆம் ஆண்டு அவர் எழுதிய மாரியம்மன் பாடல் இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர், எழுத்தாளர் என இலக்கியத்துறையிலும் அவர் தனது பங்களிப்பைச் செய்து வருகிறார்.

No comments: