(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பில் சமீபத்தி சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்பட்ட கன மழை, பெருவெள்ளம் என்பனவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் அவசியத் தேவையான நிவாரணப் பொருட்களை இலங்கை விமானப்படையினர் வழங்கி வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளான சேத்துக்குடா, வீச்சிக்கல்முனை மற்றும் கன்னங்குடா ஆகிய பகுதிகளில் 1000 சமைத்த உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
அத்துடன், கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னங்குடா பகுதியில் உள்ள பெண்களுக்காக சவர்க்காரம், பற்பசை, பல்துலக்கி;, சுகாதாரத் துவாய்கள்; உள்ளிட்ட 580 ஆரோக்கியப் பொதிகள் விநியோகிக்கப்பட்டதுடன், பால்மா, தேயிலை, சர்க்கரை, பிஸ்கட், சமபோஷா, நூடில்ஸ், ஜெல்லி, பரசிற்றாமோல் உள்ளிட்ட உலர் உணவு பொதிகள் கன்னங்குடா பகுதியில் உள்ள 160 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
உலர் உணவுகள் மற்றும் சுகாதாரப் பொதிகள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் நன்கொடையாளர்களான சிறிலங்கா அறக்கட்டளை மற்றும் வண. கட்டானே தம்மரக்கித தேரோ ஆகியோரின் ஆதரவின் மூலம் கிடைக்கப் பெற்றவையாகும்.
No comments: