தமிழரசுக் கட்சியின் அவசர வேண்டுகோளுக்கிணங்க வெள்ளம் தொடர்பாக அரச நிர்வாகத்தினருடனான கூட்டம்..!
தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. ஸ்ரீநேசன் மற்றும் இ. ஸ்ரீநாத் அவர்களின் அவசர வேண்டுகோளுக்கிணங்க இன்று 02.12.2024 மட்டக்களப்பின் அபிவிருத்திக் குழுத் தலைவர் அருண் ஹேமச்சந்திரன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர். திருமதி. ஜஸ்டினா முரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இதர பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச நிர்வாகம் மற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கிடையான கூட்டமொன்று இடம்பெற்றது.
இதில் அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்களும், கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் பற்றி பேசப்பட்டது. மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பினாலும் கூட பல விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அநேகமான பாலங்கள், பாதைகள் போன்றன சேதமடைந்துள்ளன. இதனை புனரமைப்பு செய்வதற்குரிய ஆயத்தங்கள் மிக விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் பிரதேசங்களில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அனர்த்த முகாமை பற்றிய முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் சம்பந்தமாகவும் இனிவரும் காலங்களில் பாதிக்கப்பட மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
12/03/2024 12:29:00 PM
Home
/
Unlabelled
/
தமிழரசுக் கட்சியின் அவசர வேண்டுகோளுக்கிணங்க வெள்ளம் தொடர்பாக அரச நிர்வாகத்தினருடனான கூட்டம்..!
தமிழரசுக் கட்சியின் அவசர வேண்டுகோளுக்கிணங்க வெள்ளம் தொடர்பாக அரச நிர்வாகத்தினருடனான கூட்டம்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: