News Just In

12/24/2024 11:10:00 AM

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காரைதீவில் கௌரவமளிப்பு !

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காரைதீவில் கௌரவமளிப்பு !



நூருல் ஹுதா உமர்

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறி பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொணரும் வகையில் நடத்தப்படும் தேசிய ஆக்கத்திறன் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது 21.12.2024ம் திகதி சனிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் பங்கு பற்றி வெற்றிப்பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுக் கொண்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் பிரதேச செயலாளரினால் திங்கட்கிழமை (23) கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய மட்டத்தில் குழு நிகழ்வில் (நாடகம்) இரண்டாம் இடம் பெற்ற முருகன் ஐக்கிய சங்க அறநெறிப் பாடசாலை மாணவர்களான கே.வர்ஷா, எஸ். மதுராந்தகி, எஸ்.தேஜன்யா, டீ.மதுசாயினி, எஸ்.கம்ஷிகா, எஸ். லேனுஷா, எஸ்.லேக்சா, ஏ.கனிஷ்கா,எஸ்.டோஜிகா, பீ.குகதீஸ், ரீ.தினோஸ்காந், என்.தர்சிகா,என். யோஜனா ஆகியோரும் கட்டுரை போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட கண்ணகி அறநெறிப் பாடசாலை மாணவி ச.யகாத்மிகா, சித்திரம் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்ட இந்து கலாசார ஒன்றிய அறநெறிப் பாடசாலை மாணவர் வீ.பிருஷாந், பேச்சாற்றல் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட இந்து சமய விருத்தி சங்க அறநெறிப் பாடசாலை மாணவி இ. ஜோதிர்மயி, கதாப்பிரசங்கம் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட இந்து கலாசார ஒன்றிய அறநெறிப்பாடசாலை மாணவி ஜ.சதுஷிகா ஆகியோரே கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் காரைதீவு பிரதேச செயலாளர் ஜீ.அருணன் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி,மற்றும் பிரதேச செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எல். .சிவலோஜினி அவர்களின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

No comments: