News Just In

12/04/2024 10:39:00 AM

ரயில் பாதை கண்காணிப்பு ஊழியர் ரயிலில் மோதி உயிரிழப்பு!

ரயில் பாதை கண்காணிப்பு ஊழியர் ரயிலில் மோதி உயிரிழப்பு!


கண்டி ரயில் நிலையத்தில் புகையிரத பாதை கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அளவத்தேகம, கல்லேல்ல என்ற பகுதியைச் சேர்ந்த டக் ஒப்பரேட்டராக பணிபுரியும் 58 வயது நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் தேநீர் குடிப்பதற்காக ரயில் மார்க்கத்தின் வழியாக வந்துள்ளார். அச்சமயம் கடுகதி ரயிலொன்று பேராதனையிலிருந்து கண்டி நோக்கி வருவதைக் கண்டு, அவர் மற்றொரு ரயில் ஓடும் மார்க்கத்துக்கு சடுதியாக மாறியுள்ளார்.

அவ்வேளை அந்த மார்க்கத்தில் பயணித்த ரயில் எஞ்சினில் மோதுண்டு கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

No comments: