புதிய நிருமாணிக்கப்பட்டு தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இலங்கை வங்கியின் கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கி மட்டக்களப்பு கிளையின் முகாமையாளர் தாட்சாயினி பவான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் ஜஸ்டினா ஜுலேகா கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பழைய மாவட்ட செயலகத்தில் இயங்கி வந்த இலங்கை வங்கிக் கிளையே இப்பொழுது புதிய மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் வங்கிக்கிளையில் தனி நபர் வங்கிச் சேவை, தங்க கடன் அடகுச் சேவை, காசாளர் கரும பீடம் என்பன இடம் பெறவுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் ஏரிஎம் இயந்திரம் பொருத்தப்படவுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிக் கிளை திறப்பு விழா நிகழ்வில் இலங்கை வங்கியின் கிழக்கு பிராந்திய உதவி பொது முகாமையாளர் குமுது மஹாவத்த, கிழக்கு பிராந்திய செயற்பாட்டு முகாமையாளர் ரசிக விஜயரத்தின, மாவட்ட முகாமையாளர் என். பிரதீபன் உள்ளிட்ட மாவட்ட செயலகத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments: